News October 3, 2025
வடசென்னை உலகில் சிம்பு படம்: வெற்றிமாறன்

சமீப காலமாக வெற்றிமாறன் எங்கு சென்றாலும் ‘வடசென்னை 2’ அப்டேட்டை ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், ஒரு விழாவில் இதுகுறித்து பேசிய அவர், தனது அடுத்த படம் வடசென்னை 2 இல்லை என உறுதி செய்தார். சிம்புவை வைத்தே அடுத்த படத்தை எடுத்து வருவதாகவும் கூறினார். இது வடசென்னை 2 அல்ல என்ற வெற்றிமாறன், ஆனால் வடசென்னை உலகில் நடக்கும் கதை என அப்டேட் கொடுத்துள்ளார்.
Similar News
News October 3, 2025
காழ்ப்புணர்ச்சியுடன் பேசும் கவர்னர்: வைகோ

திமுக அரசின் மீது, கவர்னர் RN ரவி காழ்ப்புணர்ச்சியுடன் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என <<17900119>>கவர்னர் விமர்சிந்திருந்த <<>>நிலையில் அதற்கு வைகோ பதிலடி கொடுத்துள்ளார். பழங்குடியினர், பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை திமுக அரசு முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
News October 3, 2025
அமைதிக்கு உடன்படாத ஹமாஸ்: 57 பேர் பலி

டிரம்ப் வகுத்த அமைதி திட்டத்துக்கு இஸ்ரேல் PM ஒப்புக்கொண்டாலும், ஹமாஸ் செவிசாய்ப்பதாக இல்லை. இதனால் மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியதில், நேற்று 57 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காசாவில் 27 பேரும், உணவு விநியோக மையங்களில் 30 பேரும் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். காசாவிற்கு உதவி பொருள்கள் ஏற்றிவந்த கப்பல்களையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது.
News October 3, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ₹880 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹880 குறைந்து ₹86,720-க்கும், கிராமுக்கு ₹110 குறைந்து ₹10,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலை மீண்டும் குறையத் தொடங்கியதால், நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.