News April 27, 2025

சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு?

image

சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ரசிகர்களிடையே ஹாட் டாபிக்காக இது மாறியுள்ளது. KGF படத்தை தயாரித்த ஹொம்பலே நிறுவனம் தான் இப்படத்தையும் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு – சுதா காம்போ.. எப்படி இருக்கும்?

Similar News

News December 11, 2025

நீதிபதியின் பின்னனியில் சதிக்கும்பல்: திருமாவளவன்

image

நீதிபதி G.R.சுவாமிநாதன் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மத்திய உள்துறை செயலாளரை அவர் இணைத்தது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. இவருக்கு பின்னனியில் ஒரு சதிக்கும்பல் வேலை செய்வதாக தோன்றுகிறது. எனவே அவருக்கு எந்த வழக்கையும் சென்னை ஐகோர்ட் ஒதுக்க கூடாது என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

News December 11, 2025

PM மோடி, அமித்ஷா, ராகுல் கூட்டாக ஆலோசனை

image

தலைமை தகவல் ஆணையர், லஞ்ச ஒழிப்புத்துறை தலைவரை பிரதமர், மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய குழு தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்தவகையில், இது தொடர்பாக PM மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர். சுமார் 88 நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில், சிலரது பெயர்கள் நியமனம் செய்யப்பட்டதாகவும், அதற்கு ராகுல் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News December 11, 2025

டிசம்பர் 11: வரலாற்றில் இன்று

image

*சர்வதேச மலை நாள். *1882 –கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்தநாள். *1931 – ஆன்மிகவாதி ஓஷோ பிறந்தநாள். *1935 – 13வது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறந்தநாள். *1958 – நடிகர் ரகுவரன் பிறந்தநாள். *1969 – செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்தநாள். *1972 – அப்பல்லோ 17 நிலாவில் தரையிறங்கியது. *1980 – நடிகர் ஆர்யா பிறந்தநாள். *2004 – பாடகி M.S. சுப்புலட்சுமி உயிரிழந்தநாள்.

error: Content is protected !!