News June 26, 2024
வெங்கல் ராவுக்கு சிம்பு ₹2 லட்சம் உதவி

வெங்கல் ராவுக்கு, நடிகர் சிம்பு ₹2 லட்சம் வழங்கி உதவியுள்ளார். வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்தவர் வெங்கல் ராவ். இந்த நிலையில், கை, கால்கள் செயலிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தனது மருத்துவ சிகிச்சைக்கு, நடிகர்கள், நடிகர் சங்கம் உதவ வேண்டும் என சமீபத்தில் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்திருந்தார். இதனைப் பார்த்த நடிகர் சிம்பு, உடனடியாக அவருக்கு உதவி செய்துள்ளார்.
Similar News
News March 2, 2026
மகளிருக்கு மேலும் ₹5,000.. வந்தது ஹேப்பி நியூஸ்

பிப்.13-ல் மகளிர் வங்கிக் கணக்கில் ₹5,000 வரவு வைத்து தமிழக அரசு சர்ப்ரைஸ் கொடுத்தது. தற்போது, மேலும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் மீண்டும் ₹5,000 வழங்க அரசு திட்டமிட்டு வருகிறதாம். மகளிருக்கான கடனுதவி (அ) சுயதொழில் தொடங்கும் திட்டமாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான, இறுதி வடிவம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
News March 2, 2026
செங்கோட்டையன் எடுத்தது நல்ல முடிவு: சசிகலா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பலரும் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துள்ளனர். இதில் தனிக்கட்சி தொடங்கியுள்ள சசிகலா, திமுகவில் OPS இணைந்தது துரதிருஷ்டவசமானது; அவரின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது என விமர்சித்திருந்தார். இந்நிலையில் எதிரியுடனும், துரோகிகளுடனும் சேராமல், செங்கோட்டையன் புதிய கட்சிக்கு சென்றுள்ளார்; அதுவரைக்கும் அவரின் முடிவு நல்லது என சசிகலா மனம் திறந்துள்ளார்.
News March 2, 2026
பிரபல தமிழ் நடிகர் அப்பா ஆனார் ❤️❤️

நடிகர் ஹரிஷ் கல்யாண் – நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சோஷியல் மீடியாவில் அறிக்கை வெளியிட்டுள்ள ஹரிஷ், தனது இதயம் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும், நாங்கள் அழகான புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் வளரும் நட்சத்திரமாக அறியப்படும் ஹரிஷ் கல்யாண், 2022-ல் நர்மதாவை கரம்பிடித்தார்.


