News April 20, 2024
படப்பிடிப்பில் சிக்கியதால் சிம்பு வாக்களிக்கவில்லை

படப்பிடிப்பில் சிக்கிக் கொண்டதால் தான், நடிகர் சிம்புவால் வாக்களிக்க முடியாமல் போனதாக தகவல் கசிந்துள்ளது. ‘தக் லைஃப்’ படத்தின் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருந்ததால், நேற்று நடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் அவர் பங்கேற்கவில்லை. ராஜஸ்தானில் நடந்து வரும் படப்பிடிப்பில், நடிகர் கமல்ஹாசனும் விரைவில் இணையவுள்ளார். படத்தை 2025இல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News August 21, 2025
மசூதியில் பயங்கரம்: 50 பேர் துடிதுடிக்க கொலை!

நைஜீரியாவின் மசூதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில், 30 பேர் துப்பாக்கி சூட்டிலும், 20 பேர் உயிருடன் எரித்தும் கொல்லப்பட்டுள்ளனர். எந்த பயங்கரவாத கும்பலும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. வடமேற்கு & வடமத்திய நைஜீரியாவில் விவசாயிகள் & கால்நடை வளர்ப்பு தொழிலாளர்களுக்கிடையே நிலம் தொடர்பான மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது.
News August 21, 2025
மிஷ்கின் – கீர்த்தி சுரேஷ் இணையும் புதிய படம்

தனது படைப்புகளின் மூலம் தனித்துவமான இயக்குநராக தெரிந்த மிஷ்கின், சமீப காலங்களில் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், புதுப்படம் ஒன்றில் அவர், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் இயக்குநர் யார் என்பது விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக ‘டிராகன்’ படத்தில் மிஷ்கினின் நடிப்பு பேசப்பட்டது.
News August 21, 2025
ஆபத்தான முறையில் விஜய் தொண்டர்கள்..

மாநாட்டில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அக்கட்சியின் தொண்டர்கள், குவிந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, விஜய்யின் பேச்சை கேட்கவும், அவரை பார்க்கவும் மிகுந்த ஆவலுடன் இருக்கும் தொண்டர்கள் முன் வரிசையில் இடம் பிடிக்க துடிக்கின்றனர். இதனால் மாநாட்டு பந்தலுக்குள் செல்ல முறையான பாதைகளை விட்டு விட்டு 10 அடி உயர தடுப்புகளை தாண்டி ஆபத்தான முறையில் தொண்டர்கள் செல்கின்றனர்.