News April 16, 2025

10 நிமிடத்தில் வீட்டிற்கே வரும் சிம் கார்டு

image

சிம் கார்டுகளை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்வதற்காக, டெலிவரி பார்ட்னராக பிளிங்கிட்டை ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. சிம் டெலிவரி சேவை, சென்னை, ஐதராபாத், புனே, மும்பை உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களில் கிடைக்கும். சிம் கார்டு டெலிவரி செய்யப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையின்படி, ஆதார் அடிப்படையிலான KYC அங்கீகாரத்தைப் பயன்படுத்தி எண்ணை செயல்படுத்தலாம்.

Similar News

News April 17, 2025

DC த்ரில் வெற்றி

image

விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடந்த இன்று நடந்த DC, RR இடையிலான போட்டி டிராவில் முடிந்ததால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த RR, ஹெட்மேயர் செய்த மிகப்பெரிய தவறு காரணமாக, அடுத்தடுத்து ரன் அவுட் ஆகி, 0.5 ஓவரில் 11 ரன்களுக்கு 2 விக்கெட்டை பறிகொடுத்தது. இதன்பின் களமிறங்கிய DC, இந்த இலக்கை எளிதில் எட்டி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

News April 17, 2025

குற்றஞ்சாட்டிய பாடகருக்கு ARR கொடுத்த ரியாக்‌ஷன்

image

கலைஞர்களுக்கு சான்ஸ் கொடுக்காமல், டெக்னாலஜியை அதிகம் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டிய பாடகர் அபிஜித் மீது வருத்தமில்லை என ARR தெரிவித்துள்ளார். அபிஜித் மீது எந்த வெறுப்பும் இல்லை எனவும், அனைத்திற்கும் தன்னை குற்றஞ்சாட்டுவதும் கூட நன்றாகத் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ‘சவ்வா’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் 100 கலைஞர்களுக்கும் மேல் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

ராசி பலன்கள் (17.04.2025)

image

➤மேஷம் – லாபம் ➤ரிஷபம் – பணிவு ➤மிதுனம் – இரக்கம் ➤கடகம் – பெருமை ➤சிம்மம் – பாசம் ➤கன்னி – உதவி ➤துலாம் – சாந்தம் ➤விருச்சிகம் – பகை ➤தனுசு – சினம் ➤மகரம் – நோய் ➤கும்பம் – ஆக்கம் ➤மீனம் – தடங்கல்.

error: Content is protected !!