News August 9, 2024
BIG BREAKING: வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், முதல் செட் சுற்றில் அதிகபட்சமாக 89.45 மீ., தூரத்துக்கு ஈட்டி எறிந்து 2ஆம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை உறுதிசெய்துள்ளார். இதன் மூலம் இரு ஒலிம்பிக்ஸில் 2 பதக்கங்களை வென்ற 4வது இந்தியர் & தனிநபர் பிரிவில் வென்ற 3வது இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
Similar News
News December 1, 2025
கடலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
சிவகங்கை பஸ் விபத்து: PM மோடி இரங்கல்

காரைக்குடி அருகே <<18432348>>அரசு பஸ்கள் விபத்தில்<<>> ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிப்பதாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாக கூறிய அவர், PMNRF-ல் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 1, 2025
கேப்டன் கில்லின் நிலை என்ன?

SA-வுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெஸ்ட் & ODI தொடரில் இருந்து விலகிய அவர், இன்று BCCI-யின் சிறப்பு மையத்தில் (CoE) பயிற்சியை தொடங்கவுள்ளாராம். ஓரிரு நாள்களில் பேட்டிங் பயிற்சியை அவர் தொடங்குவார் என்றும், அதை தொடர்ந்தே SA-வுக்கு எதிரான T20 போட்டிகளில் கில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.


