News September 13, 2024

வெள்ளி விலை கிலோவுக்கு ₹3,500 உயர்வு

image

வெள்ளி விலை கிலோவுக்கு இன்று ₹3,500 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளி ₹91.50க்கும், 1 கிலோ வெள்ளி ₹91,500க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹3.50 உயர்ந்து ₹95ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ₹3,500 உயர்ந்து ₹95,000க்கு விற்கப்படுகிறது. இதையும் சேர்த்து, கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 அதிகரித்துள்ளது.

Similar News

News October 18, 2025

தீபாவளி விடுமுறை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

image

தீபாவளி விடுமுறையையொட்டி, தமிழகம் முழுவதும் 1,353 அவசர கால 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால், நான்கே நிமிடத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 18, 2025

இந்த உயிரினங்களால் விண்வெளியிலும் வாழ முடியும்!

image

சுவாசிக்க ஆக்சிஜன், உயிர் வாழ தண்ணீர், சூரிய ஒளி இல்லாததால் மனிதர்களால் விண்வெளியில் வாழமுடியாது. அப்படி இருக்க சில உயிரினங்களால் மட்டும் விண்வெளியிலும் வாழ முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவை எந்த உயிரினங்கள் என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. எல்லாருக்கும் இத SHARE பண்ணுங்க.

News October 18, 2025

தேர்வு கிடையாது.. மத்திய அரசில் 2,623 வேலை அறிவிப்பு

image

ONGC நிறுவனத்தில் 2,623 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ITI, டிப்ளமோ, டிகிரி. வயது வரம்பு: 18 – 24 (தளர்வுகளும் உண்டு). உதவித்தொகை: ITI முடித்தவர்களுக்கு ₹10,560, டிப்ளமோ தகுதிக்கு ₹10,900, டிகிரி முடித்தவர்களுக்கு ₹12,300. தேர்வு முறை: கல்வித்தகுதியின் அடிப்படையில். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.6. இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

error: Content is protected !!