News September 13, 2024
வெள்ளி விலை கிலோவுக்கு ₹3,500 உயர்வு

வெள்ளி விலை கிலோவுக்கு இன்று ₹3,500 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளி ₹91.50க்கும், 1 கிலோ வெள்ளி ₹91,500க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹3.50 உயர்ந்து ₹95ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ₹3,500 உயர்ந்து ₹95,000க்கு விற்கப்படுகிறது. இதையும் சேர்த்து, கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 அதிகரித்துள்ளது.
Similar News
News November 19, 2025
திருவள்ளூர்: விமானப் படையில் 340 காலியிடங்கள்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய விமானப் படையில் ‘Flying Branch , Ground Duty’ பிரிவுகளில் உள்ள 340 காலியிடங்களை நிரப்ப தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிச.14ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.56,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 19, 2025
இராம்நாடு: 3 மாணவர்கள், விடுதி காப்பாளர் மீது போக்சோ

இராமநாதபுரம் சமூக நீதி விடுதியில் 7ம் வகுப்பு மாணவனுக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 மாணவர்கள், விடுதி காப்பாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்தும், மாணவரை சாதி பெயர் சொல்லி மிரட்டியதாக பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். 3 மாணவர்கள், விடுதி காப்பாளர் மீது எஸ்.டி,எஸ்.சி வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
News November 19, 2025
கன்னியாகுமரி: எங்கெல்லாம் மின்தடை? முன்பே அறியலாம்!

குமரி முழுவதும் எளிதாக மின்தடை எப்போதெல்லாம் ஏற்படும் என்பதை ஆன்லைன் மூலமாக நீங்களே வீட்டில் இருந்தபடி தெரிந்து கொள்ளலாம். மின்வாரியம் இதற்கான வசதியை செய்து தந்துள்ளது. இந்த <


