News April 15, 2025
மீண்டும் வேகமெடுக்கும் வெள்ளி விலை.. ₹2,000 உயர்வு

சென்னையில் <<16104127>>தங்கம் விலை<<>> இன்று குறைந்த போதிலும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹2,000 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ₹110-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,10,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு உயர்ந்து வந்த வெள்ளி, தங்கத்தின் விலை குறையும்போது குறைந்து வந்தது. ஆனால், இன்று தங்கம் விலை குறைந்த போதிலும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News April 17, 2025
பாஜகவில் சேரப் போகிறேனா? சாட்டை பதில்

பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவலை சாட்டை துரைமுருகன் மறுத்துள்ளார். MLA, MP சீட்டுக்காக தான் அரசியலுக்கு வரவில்லை எனவும், நாம் தமிழர் கட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சீமானின் தம்பியாகவே என்றும் இருப்பேன் எனவும் அவர் உறுதியுடன் கூறியுள்ளார். மேலும், சீமானுக்கு ஒருபோதும் துரோகம் செய்யமாட்டேன் எனவும், துரோகம் என்பது தனது மரபணுவிலேயே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
விஜய் டிவி பிரபலத்துக்கு 2-வது திருமணம்.. அசத்தும் ஜோடி

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே 2-வது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஏற்கனவே பிரவீன் என்பவருடன் திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில், தற்போது வசி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன. தொகுப்பாளராக இருந்தாலும் பிரியங்காவுக்கு என பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
News April 16, 2025
கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு காயம்

DCக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து RR கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக வெளியேறியிருக்கிறார். 189 என்ற இலக்கை துரத்திய அவர், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் 31 ரன்கள் எடுத்திருந்த போது, போட்டியின் 5.3ஆவது பந்தில் காயம் ஏற்பட்டது. விப்ராஜ் வீசிய அந்த பந்து ஃபுல்டாஸாக வந்ததால், அதனை ஓங்கி அடித்தபோது சாம்சனுக்கு வலி ஏற்பட்டு வெளியேறினார்.