News April 27, 2025
வெள்ளி விலை 4 மாதங்களில் ரூ.14,000 அதிகரிப்பு

கடந்த ஜன. 1-ம் தேதி 1 கிராம் வெள்ளி ரூ.98ஆகவும், 1 கிலோ ரூ.98,000ஆகவும் விற்கப்பட்டது. பிறகு ஜெட் வேகத்தில் உயர்ந்த விலை, குறையவே இல்லை. சுமார் 2 வாரங்களாக விலை மாறாமல் 1 கிராம் ரூ.111ஆகவும், 1 கிலோ ரூ.1.11 லட்சமாகவும் விற்கப்பட்டது. நேற்று திடீரென 1 கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.112ஆகவும், 1 கிலோ ரூ.1,000 அதிகரித்து ரூ.1.12 லட்சமாகவும் விற்கப்பட்டது. இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது.
Similar News
News April 27, 2025
விஜய்யை வடிவேலு உடன் ஒப்பிட்ட ராஜேந்திர பாலாஜி

விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வரும் நிலையில்,விஜய் நடத்தியது பூத் கமிட்டி கூட்டம் போல இல்லை; பொதுக்கூட்டம் போல உள்ளது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மேலும், 2011-ல் வடிவேலுவுக்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறவில்லை என்றும் அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்போம் என்றும் தெரிவித்தார்.
News April 27, 2025
ராக்கெட் போல மேலே வந்த MI

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இருந்த MI அணி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல் 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருந்த இந்த அணி, 5 தொடர் வெற்றிகள் மூலம் ராக்கெட் வேகத்தில் மேலே வந்துள்ளது. MI அணியின் இந்த அசுர வளர்ச்சிக்கு என்ன காரணம் என்று கமெண்ட்டில் சொல்லுங்க.
News April 27, 2025
54 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாக்., ராணுவம்!

ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற 54 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வசிரிஸ்தானில் (Waziristan) தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இச்சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.