News June 26, 2024
வெள்ளி விலை கிலோ ₹1000 சரிந்தது

சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ₹1000 குறைந்து ₹94,500ஆக விற்பனையாகிறது. கடந்த மாத இறுதியில் ₹1,02,200க்கு விற்கப்பட்ட வெள்ளி ஒரு மாதத்தில் சுமார் ₹8000 சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி இன்று ₹94.5ஆக உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹53,280க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,680க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று ₹20 குறைந்து ₹6,660க்கு விற்கப்படுகிறது.
Similar News
News December 13, 2025
மெஸ்ஸியிடம் மன்னிப்புக்கேட்ட மம்தா!

சால்ட் லேக் மைதானத்துக்கு வந்த மெஸ்ஸி, கொஞ்ச நேரத்திலேயே புறப்பட்டுவிட்டார். ஏற்பாட்டாளர்களே அவரை சூழ்ந்து நின்றதால் அவரை பார்க்க முடியாமல் கடுப்பான ரசிகர்கள் <<18551245>>மைதானத்தை சூறையாடினர்.<<>> இந்த நிகழ்வின் நிர்வாக குறைபாடை கண்டு அதிர்ச்சியடைந்ததாக மே.வங்க CM மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்காக மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும், இதுபற்றி விசாரணை நடத்த குழு அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
ஒரே போட்டோவில் 2 G.O.A.T’s!

இந்தியா வந்துள்ள மெஸ்ஸியை காண ரசிகர்களை போலவே, பல நட்சத்திரங்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்று காலை கொல்கத்தா சென்ற அவரை நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவரது மகன், ஆர்யன் கான் மெஸ்ஸியுடன் போட்டோ எடுத்து கொண்டார். ஒரே ஃப்ரேமில் ஷாருக்கானும், மெஸ்ஸியும் இருப்பதை ரசிகர்கள், ‘2 G.O.A.T’s in one frame’ என கமெண்ட் செய்து வைரலாக்கியுள்ளனர்.
News December 13, 2025
BREAKING: மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, டெல்டா, தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் நாள்களில் அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது. அதனால், கவனமாக இருங்கள் நண்பர்களே!


