News June 26, 2024
வெள்ளி விலை கிலோ ₹1000 சரிந்தது

சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ₹1000 குறைந்து ₹94,500ஆக விற்பனையாகிறது. கடந்த மாத இறுதியில் ₹1,02,200க்கு விற்கப்பட்ட வெள்ளி ஒரு மாதத்தில் சுமார் ₹8000 சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி இன்று ₹94.5ஆக உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹53,280க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,680க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று ₹20 குறைந்து ₹6,660க்கு விற்கப்படுகிறது.
Similar News
News December 5, 2025
சற்றுமுன்: விடுமுறை.. 3 நாள்களுக்கு ஹேப்பி நியூஸ்

வார விடுமுறையையொட்டி இன்று முதல் டிச.7 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை,கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஊருக்கு செல்ல தயாராகிட்டீங்களா?
News December 5, 2025
மதமோதலை ஏற்படுத்த TN அரசு முயற்சி: அண்ணாமலை

சிக்கந்தர் மசூதியை தவிர, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தமானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டிய அவர், தீபத்தூண் கோயிலுக்கு சொந்தமானது என்பது தீர்ப்புகளில் உறுதியாக உள்ளதாக கூறினார். இந்த விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி பொய்களை கூறி வருவதாக விமர்சித்த அவர், மதமோதலை ஏற்படுத்த தமிழக அரசு தான் முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
News December 5, 2025
மழைக்காலத்தில் மட்டுமே பாக்.,-க்கு நீர்: மத்திய அரசு

இந்தியாவின் சட்லஜ், பியாஸ் நதிகளில் இருந்து, பருவமழை காலத்தை தவிர வேறு எந்த காலத்திலும் PAK-க்கு தண்ணீர் திறந்துவிடப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய இணையமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, இந்த ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணைகளின் பாதுகாப்பிற்காக மட்டுமே நீர் வெளியேற்றப்படுவதாக குறிப்பிட்டார்.


