News August 7, 2025
வெள்ளி விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹127-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆக.4-ம் தேதி கிலோ வெள்ளி ₹1,23,000-ஆக இருந்த நிலையில், 3 நாளில் ₹4,000 அதிகரித்துள்ளது. தொடர்ந்து உயர்வை கண்டு வரும் தங்கம், வெள்ளி விலை, வரும் நாள்களில் குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Similar News
News August 7, 2025
இது நடந்தால் மட்டுமே மதிமுக கூட்டணி மாறும்

மதிமுக கூட்டணி மாறும் என மல்லை சத்யா கூறியது, ஏற்கெனவே பொதுவெளியில் அடிபடும் செய்திதான். MP-ஆக இருக்கும் துரை, மத்திய அமைச்சரவையில் பங்குபெற்றால்தான் அரசியல் எதிர்காலம் இருக்கும் என அவர் கணக்கு போடுகிறார். இதனால், அமைச்சர் பதவி உறுதியான பிறகுதான் கூட்டணி மாறும் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. தேர்தலுக்கு 8 மாதம் இருப்பதால், அதற்குமுன் எதுவும் நடக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News August 7, 2025
FLASH: அதிமுகவில் இணைந்தனர்

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் EPS முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அதில், OPS ஆதரவாளர்களான சங்கரன்கோவில் நகர செயலாளர் சோடா சங்கர், சரவணன், வடகரையை சேர்ந்த DMK நிர்வாகி அய்யப்பன், MDMK நிர்வாகி முருகன், சமூக ஆர்வலர் அருண் உள்ளிட்டோர் இருந்தனர். தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக EPS தீவிர பரப்புரை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News August 7, 2025
ஆகஸ்ட் 8.. இந்த வார OTT ரிலீஸ் லிஸ்ட்!

➤ட்ரெண்டிங்- Sun Nxt
➤மாமன்- Zee5
➤பறந்து போ- டிஸ்னி ஹாட்ஸ்டார்
➤ஓஹோ எந்தன் பேபி- நெட்பிளிக்ஸ்
➤மாயாசபா(தெலுங்கு)- சோனி லிவ் (வெப் சீரிஸ்)
➤மைக்கி 17(Eng)- டிஸ்னி ஹாட்ஸ்டார்
➤வெட்னஸ்டே சீசன் 2 (Eng)- நெட்பிளிக்ஸ்
➤பத்மாஷுலு(தெலுங்கு)- Etv Win
➤ரெட் லெட்டர்(ஹிந்தி)- Shemaroo Me
➤நடிகர்(மலையாளம்)- Saina Play