News April 3, 2025
வெள்ளி விலை கிலோவுக்கு ₹2,000 குறைந்தது

சென்னையில் வெள்ளி விலை இன்று (ஏப்.3) கிராமுக்கு 2 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ₹112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ₹2,000 குறைந்து ₹1,12,000க்கும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு விலை உயர்வைக் கண்டு வந்த வெள்ளி, இன்று <<15975872>>தங்கம்<<>> விலை உயர்ந்தபோதும் விலை சரிவைக் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News April 5, 2025
IPL-ல் இவர் மட்டுமே… மாஸ் சாதனை படைத்த கேப்டன்…!

18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே கேப்டன் ஹர்திக் பாண்டியாதான். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாகப் பந்துவீசிய அவர், மார்க்ரம், பூரன், ரிஷப் பண்ட், மில்லர், ஆகாஷ் தீப் ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
News April 5, 2025
நிர்வாண நடிகை… ஆனால்!

உலக சினிமாவில் முதல் முதலாக முழு நிர்வாணமாக நடித்த நடிகை ஹெடி லமார். ஆஸ்திரியாவை சேர்ந்த இவர், அடைத்துவைத்த கணவனிடம் இருந்து தப்பி அமெரிக்கா சென்றவர், அன்றுமுதல் ஹாலிவுட்டின் கனவுக்கன்னி (1930, 40கள்) ஆனார். ஆனால், இன்றும் இவரை பற்றி பேசுவதற்கு காரணம் அதுவல்ல. இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் WiFi, Bluetooth, GPS ஆகியவற்றின் அடிப்படை டெக்னாலஜியை கண்டுபிடித்தவரே இவர் தான். SHARE IT!
News April 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 05) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!