News April 3, 2025
வெள்ளி விலை கிலோவுக்கு ₹2,000 குறைந்தது

சென்னையில் வெள்ளி விலை இன்று (ஏப்.3) கிராமுக்கு 2 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ₹112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ₹2,000 குறைந்து ₹1,12,000க்கும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு விலை உயர்வைக் கண்டு வந்த வெள்ளி, இன்று <<15975872>>தங்கம்<<>> விலை உயர்ந்தபோதும் விலை சரிவைக் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News April 4, 2025
குரோசவா எனும் உலக சினிமா நாயகன்

இன்றைய உலகில் பல இயக்குநர்களின் ரோல் மாடலாக ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசவா உள்ளார். இவரது செவன் சாமுராய், ரஷோமோன் படங்கள் பல திரைப்பட கல்லூரிகளில் பாடமாக உள்ளன. ஒரு சம்பவத்தை பார்க்கும் மூவர், அதை வெவ்வேறு கோணங்களில் விவரிக்கும் திரைக்கதை பாணியை (ரஷோமோன் எஃபெக்ட்) உருவாக்கியவர். அந்த நாள், விருமாண்டி படங்கள் இதே பாணி திரைக்கதையை கொண்டுள்ளன. ஆஸ்கரின் வாழ்நாள் சாதனையாளர் விருதை இவர் பெற்றுள்ளார்.
News April 4, 2025
இன்று மும்பை vs லக்னோ.. யார் கை ஓங்கும்?

லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 16ஆவது லீக் போட்டியில் மும்பை அணியும், லக்னோ அணியும் மோத உள்ளன. இரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 6ஆவது இடத்திலும், லக்னோ அணி 7ஆவது இடத்திலும் உள்ளன. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுமே தீவிரமாக போராடும் என்பதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.
News April 4, 2025
ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கை ஒட்டி, இன்று (ஏப்.4) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த மாதம் 10ஆம் தேதி வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.