News May 28, 2024
வெள்ளி விலை மீண்டும் ₹100ஐ கடந்தது

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மீண்டும் ₹100ஐ கடந்து ₹101க்கு விற்பனையாகிறது. நேற்று ₹97.50க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, ஒரே நாளில் ₹3.50 உயர்ந்து ₹101 ஆனது. அதேபோல, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹53,920க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ₹6,720க்கு விற்பனையான நிலையில் இன்று ₹20 உயர்ந்து ₹6,740க்கு விற்பனையாகிறது.
Similar News
News August 23, 2025
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்

இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான தூதராகவும் செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். இவர் அரசுப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதாகவும் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், கடந்த ஜன.20 முதல் ஜோர்கன் கே ஆண்ட்ரூஸ் இந்தியாவில் உள்ள USA தூதரகத்தின் இடைக்கால பொறுப்பாளராக உள்ளார்.
News August 23, 2025
கூட்டணி ஆட்சி குழப்பம்.. அதிமுக மா.செக்கள் கூட்டம்

ஆக.30-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததில் மூத்த நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அத்துடன் நேற்று நடைபெற்ற BJP பூத் கமிட்டி மாநாட்டில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா பேசியது மீண்டும் கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.
News August 23, 2025
FIFA உலகக் கோப்பை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட டிரம்ப்

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை USA, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் நடத்துகின்றன. இப்போட்டிகள் 16 மைதானங்களில் நடைபெறுகின்றன. கடைசியாக 1994-ல் இத்தொடரை USA நடத்தியிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து FIFA தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ உடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த போட்டிகளைக் காண ரஷ்ய அதிபர் புடின் வரலாம் எனவும் தெரிவித்தார்.