News September 25, 2024
₹1 லட்சத்தை கடந்த வெள்ளி விலை

<<14189300>>வெள்ளி விலை<<>> ₹1 லட்சத்தைக் கடந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளி ₹98க்கும், 1 கிலோ வெள்ளி ₹98,000க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 1 கிராம் வெள்ளி ₹3 உயர்ந்து ₹101ஆக விற்பனையாகிறது. இதேபோல் 1 கிலோ வெள்ளி ₹3,000 உயர்ந்து ₹1 லட்சத்தைக் கடந்து, ₹1.01 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. 21ம் தேதி முதல் மாறாமல் இருந்த விலையில் இன்று மட்டும் ₹3,000 அதிகரித்துள்ளது. SHARE IT.
Similar News
News August 24, 2025
செல்போன் ரீசார்ஜ்.. இந்த ஆஃபரை பாருங்க

ஜியோ, ஏர்டெல் தங்களது ₹249 பேஸிக் ரீசார்ஜ்களை ரத்து செய்துவிட்டதால் பட்ஜெட்வாசிகள் பலரும் BSNL-க்கு படையெடுத்து வருகின்றனர். MNP மூலம் பலரும் BSNL உடன் இணைந்து வருகின்றனராம். காரணம், BSNL-ல் உள்ள ₹599 திட்டத்தில் 84 நாள்களுக்கு தினந்தோறும் 3GB டேட்டா, அது தீர்ந்த பிறகு 40kbps ஸ்பீடில் இணைய வசதி, 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகள் உள்ளன. இதனால் மாதத்திற்கு ₹200 மட்டுமே ஆகுமாம். சூப்பர்ல..!
News August 24, 2025
‘ஓம்’ என ஓசை எழுப்பும் தொந்தி இல்லாத விநாயகர்!

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிலையின் மீது காதை வைத்துக் கேட்டால், ‘ஓம்’ என சத்தம் வருவதாக கூறுகின்றனர். இங்கு பிள்ளையார், தொந்தி இல்லாமல், ஓம் வடிவத்தில் குறுகி காணப்படுவதால், ‘வயிறு தாரி பிள்ளையார்’ எனவும் அழைக்கப்படுகிறார். ஓம் என்ற சத்தம் கேட்பதால், அவரை ஓங்கார கணபதி என்றும் அழைக்கின்றனர். சுந்தரர் இத்தல இறைவனிடம் பதிகம் பாடி, பொன் பொருளை பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.
News August 24, 2025
தமிழகம் வரும் பஞ்சாப் முதல்வர்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆக.26-ல் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இதற்கான விழாவில் கலந்துகொள்ளுமாறு பஞ்சாப் CM பகவந்த் மானுக்கு, திமுக MP வில்சன் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். இதன் பேரில் அவர் இந்நிகழ்வில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இத்திட்டத்திற்கு பெற்றோர், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.