News May 22, 2024

தொடர்ந்து அதிகரிக்கும் வெள்ளி விலை

image

ஆபரணத் தங்கத்தின் விலையை மிஞ்சும் அளவிற்கு வெள்ளி விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒருகிராம் வெள்ளி ₹99க்கு விற்பனையான நிலையில், இன்று ₹1.30 உயர்ந்து கிராம் ₹100.30க்கும், கிலோவிற்கு ₹1300 உயர்ந்து ₹1,00,300க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை ₹10 ஆயிரம் கடந்திருப்பது 2ஆவது முறையாகும். இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி கிராம் ₹6,860, சவரன் ₹54,880க்கு விற்பனையாகிறது.

Similar News

News November 21, 2025

பட்டாவில் புதிய மாற்றம்.. தமிழக அரசு அறிவித்தது

image

வில்லங்க சான்று(EC) போல, பட்டாவின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் ‘பட்டா வரலாறு’ என்ற புதிய சேவையை அடுத்த வாரம் TN அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது. இதன்மூலம், அந்த நிலத்தின் உரிமையாளர், பட்டா எந்த காலகட்டத்தில் யார் யாருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட விவரங்களை எளிமையாக அறிய முடியும். <>www.eservices.tn.gov.in<<>> இணையதளத்தில் அடுத்த வாரம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது.

News November 21, 2025

50,000 சிறுவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?

image

நல்லது, கெட்டது தெரியாத வயதில் குற்றம் செய்யும் சிறுவர்கள், கூர்நோக்கு இல்லத்தில் பராமரிக்கப்படுகின்றனர். அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்கவே தனி சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், கூர்நோக்கு நீதி வாரியங்களிலும் மெத்தனம் காட்டப்படுவதால், 50,000 சிறுவர்கள் நீதி கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். நாடு முழுவதும் 362 கூர்நோக்கு இல்லங்களில், 55% வழக்குகள் முடிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

News November 21, 2025

BREAKING: விஜய் உடன் கூட்டணி இல்லை.. முடிவை அறிவித்தார்

image

TN-ல் கூட்டணி மாற்றம் வேண்டாம் என ராகுல் திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 18-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கார்கே இதனை, தமிழக நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான் திமுகவுடன் கூட்டணி தொடர்வதாக <<18343041>>செல்வப்பெருந்தகை<<>> நேற்று கூறியிருந்தார். சில நாள்களாக பேசப்பட்டு வந்த காங்., – தவெக கூட்டணி விவகாரத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!