News May 11, 2024

வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா

image

கத்தார் தலைநகர் தோகாவில் டைமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதில் 88.36 மீ ஈட்டி எறிந்த அவர் இரண்டாம் இடம் பிடித்தார். இந்த சீசனில் இது அவரது சிறந்த தூரமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் செக் குடியரசின் ஜாகுப் வால்டெச் முதல் இடம் பிடித்தார்.

Similar News

News September 21, 2025

நவராத்திரியும் 9 தேவிகளும்

image

நாளைமுதல் நவராத்திரி விழா 9 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாள்களும், 9 தேவியை வழிபடுவார்கள். எந்த நாளில் எந்த தேவியை வழிபட வேண்டும் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்களும் உங்க வீட்டில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாடுவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 21, 2025

BREAKING: அக்.20-ல் அனைத்து பள்ளிகளுக்கும்.. உத்தரவு

image

அரசுப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களின் விவரங்களை அக்.20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை கெடு விதித்துள்ளது. ஆசிரியர்கள் பதிவிடும் தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 21, 2025

GST குறைக்கவில்லையா? தமிழிலே புகாரளிக்கலாம்

image

2 வரம்புகளாக (5%, 18%) மாற்றப்பட்ட GST சீர்திருத்தங்கள், நாளை (செப்.22) முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், உரிய GST வரியை குறைக்காத நிறுவனங்கள் மீது புகாரளிக்க 1915 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ் உள்பட 17 மொழிகளில் புகார்களை அளிக்கலாம். <>INGRAM<<>> என்ற ஒருங்கிணைந்த போர்ட்டல் வழியாக லாக் இன் செய்தும் தங்களது புகாரை பதிவு செய்யலாம்.

error: Content is protected !!