News August 10, 2024
வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம்?

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என இந்திய ஒலிம்பிக்ஸ் சங்கம் (IOA) உறுதி தெரிவித்துள்ளது. அப்படி கிடைக்கும் பட்சத்தில் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. நேற்று 3 மணி நேரம் நீடித்த விசாரணையில், எந்த வித முறைகேடுகளிலும் அவர் ஈடுபடவில்லை என IOA தரப்பில் அழுத்தமான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
SPORTS 360°: ஆஸி., ஓபன் இறுதி போட்டியில் லக்ஷயா சென்

*இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. *ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷயா சென் இறுதி போட்டிக்கு முன்னேறினார். *வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ODI தொடரை 3-0 என நியூசிலாந்து அணி கைப்பற்றியது. *அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் வெற்றியின் விளிம்பில் வங்கதேசம் அணி உள்ளது.
News November 23, 2025
தங்கத்தில் வார்த்த சிலை ராஷி கண்ணா

இந்திய அளவில் பிரபலமான ராஷி கண்ணா, ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘அரண்மணை 3’ படத்தில் வரும் ‘அச்சோ அச்சோ அச்சச்சோ’ பாடலில் கிளாமர் காட்டி பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸானார். அவர் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் இளசுகளின் மனங்களை கவர்ந்திழுத்துள்ளது. சேலைகட்டிய தங்க தேவதையாக ஜொலிக்கும் ராஷி கண்ணாவுக்கு இன்ஸ்டாவில் ரசிகர்கள் ஹார்ட்டின்களை அள்ளிவிடுகின்றனர்.
News November 23, 2025
இந்தியாவுடன் கூட்டமைப்பை உருவாக்கிய ஆஸி, கனடா

இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து, தொழில்நுட்பம் மற்றும் புதுமை கூட்டமைப்பை (ACITI) உருவாக்கியுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில், 3 நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இந்த கூட்டமைப்பு வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச தரநிலைகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதிலும் இணைந்து செயலாற்ற உள்ளனர்


