News August 25, 2024
Work Modeஇல் சிலம்பரசன்!

’தக் லைஃப்’ படப்பிடிப்பு தளத்தில் எடுத்த போட்டோவை சிம்பு தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். கொண்டை போட்ட முடியுடன் திரும்பி அமர்ந்திருக்கும் இந்த Black & White புகைப்படம் வைரலாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சிம்பு, கமல் காம்பினேஷன் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சிம்பு லுக் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க.
Similar News
News December 19, 2025
புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான டிச.24 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு ஏதுவாக மாவட்ட நிர்வாகம் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய டிச.27 (சனிக்கிழமை) வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.2-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News December 19, 2025
வாக்கு பறிபோனது போல திமுக சித்தரிக்கும்: EPS

எதற்காக SIR தேவை என்பதை அதிமுக வலியுறுத்தியது என்று 97.37 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதில் இருந்தே தெரியும் என EPS கூறியுள்ளார். தங்கள் வாக்கு பறிபோனது போல திமுக சித்தரிக்க பார்க்கும் என்று எச்சரித்த அவர், அவர்களின் சதிவலையிலும் விழ வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். நீக்கப்பட்ட வாக்காளர்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க மா.செ.,க்களுக்கு EPS அறிவுறுத்தியுள்ளார்.
News December 19, 2025
விலை ₹11,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

பைக் வாங்க போறீங்களா? இந்த டிசம்பர் மாதத்தில், பல்வேறு பைக்குகளுக்கு ஆண்டு இறுதி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ₹11,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, என்னென்ன மாடல் பைக்குகளுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


