News October 5, 2025
கம்பீருக்கு எதிராக பொங்கிய சீக்கா

ஆஸி.,க்கு எதிரான டி20, ODI போட்டிகளுக்கான 2 அணிகளிலும் ஹர்ஷித் ராணா பெயர் இடம்பெற்றுள்ளது. இதனை விமர்சித்துள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கம்பீர் அணிக்கான முதல் பெயரையே ஹர்ஷித் என்று தான் எழுதுவார் போல என கூறியுள்ளார். முதலில் சுப்மன் கில், அடுத்து கம்பீர் என்று தான் பட்டியலே தயாராகியிருக்கும் என்றும் சாடியுள்ளார். ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி இருவரை நீக்கியதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 5, 2025
சசிகலா வீட்டில் நள்ளிரவில் அத்துமீறல்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள VK சசிகலா வீட்டில் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அத்துமீறி நுழைந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, விஜய் வீட்டின் மொட்டை மாடியில் மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரை விசாரித்ததில், 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தது தெரிய வந்தது.
News October 5, 2025
வீட்டில் சாமி கும்பிடும் போது இந்த 3 விஷயங்கள் முக்கியம்!

வீட்டில் இறைவனை தூய மனதுடன் வழிபட முடியவில்லை, பூஜை செய்ய முடியவில்லை என்றால் அதற்கு கர்ம வினைதான் காரணம் என நம்பப்படுகிறது. இதிலிருந்து விடுபட இந்த 3 விஷயங்களை பின்பற்ற வேண்டும். இதை ‘ திரிகரண சுத்தி’ என்கிறார்கள். அதாவது வழிபடும் போது, மனதில் நல்ல எண்ணங்களை நிலைநிறுத்தி, கைகளால் பூக்களை தூவி, வாய் முழுக்க கடவுளின் மந்திரங்களை உச்சரித்து இறைவனை பூஜிக்க வேண்டும். SHARE IT.
News October 5, 2025
ஓவியங்களே பொறாமை கொள்ளும் ஓவியா PHOTOS

களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஓவியாவுக்கு, பிக் பாஸ் மூலம் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. ஓவியா, சமீப காலங்களில் தமிழ் படங்கள் நடிப்பதில்லை என்றாலும், ரசிகர்கள் குறையவில்லை. இவர் தற்போது, தனது லேட்டஸ்ட் போட்டோஸை பதிவிட்டுள்ளார். பாருங்க, பிடித்திருந்தா ஒரு லைக் போடுங்க.