News March 30, 2025

5 மணி நேரத்திற்கு முன்பே ஆன்லைனில் வந்த ‘சிக்கந்தர்’

image

சல்மான் கான் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இன்று ‘சிக்கந்தர்’ படம் வெளியாகி இருக்கிறது. பெரிய கலெக்‌ஷனை இப்படம் செய்யும் என வழி மேல் விழி வைத்து காத்திருந்த படக்குழு தலையில், பெரிய இடி விழுந்துள்ளது. பட ரிலீசின் 5 மணி நேரத்திற்கு முன்பே ஆன்லைனில், Tamilrockers மற்றும் MovieRules தளங்களில் படம் வந்துவிட்டது. இதனால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இப்படி படம் பார்ப்பதை ஊக்குவிக்க வேண்டாம்!

Similar News

News April 1, 2025

‘Money heist’ பார்த்து கொள்ளை – சிக்கிய கும்பல்…!

image

கர்நாடகாவில் வங்கிக் கொள்ளை வழக்கில் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலம் போலீஸை அதிர வைத்துள்ளது. 2024-ல் SBI வங்கியில் 17 கிலோ தங்க நகைகளை சுருட்டிய வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், Money heist உள்ளிட்ட சீரிஸ் பார்த்து கொள்ளையடிக்க பயிற்சி பெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கிணற்றில் மறைத்து வைத்திருந்த அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

News April 1, 2025

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் ராஜினாமா

image

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி கேப்டன் பிராத்வெய்ட் ராஜினாமா செய்துள்ளார். வெஸ்ட் இண்டீசில் ஆஸி. அணி விரைவில் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் புதிய தலைமைக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் தலைமையில் ஆஸி.யில் 27 ஆண்டுகளுக்கு பிறகும், பாக்.கில் 37 ஆண்டுகளுக்கு பிறகும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியை வென்று சாதனை படைத்தது.

News April 1, 2025

தொடரும் ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! மீண்டும் ஒப்பந்தம்

image

BCCI ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் மீண்டும் இணைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை என்ற காரணத்திற்காக இஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ்க்கு மீண்டும் ஒப்பந்தத்தில் இணைகிறார். ₹7 கோடி சம்பளமான A+ பிரிவில் ரோகித், விராத், பும்ரா தொடர்வார்கள் என தெரிகிறது.

error: Content is protected !!