News October 13, 2025
சிக்கந்தர்: AR முருகதாஸை சாடிய சல்மான் கான்

‘சிக்கந்தர்’ பட தோல்விக்கு சல்மான் கானும் ஒரு காரணம் என AR முருகதாஸ் கூறியிருந்தார். குறிப்பாக, சல்மான் கான் ஷூட்டிங்கிற்கு இரவு 9 மணிக்கு வந்ததால் பல சீன்களை, தான் நினைத்தபடி எடுக்க முடியவில்லை என்று கூறியிருந்தார். தாமதமாக வந்ததை ஒப்புக் கொண்ட சல்மான் கான், இப்படத்தை முதலில் தயாரிக்கவிருந்த சஜித் நதியத்வாலா எஸ்கேப் ஆகிவிட்டதாக, ARM-ன் கதை தோல்வி அடைந்ததை மறைமுகமாக சாடியுள்ளார்.
Similar News
News October 13, 2025
ப.சிதம்பரம் கருத்தால் காங்கிரஸ் தலைமை அதிருப்தி

ஆபரேஷன் ப்ளு ஸ்டாரை பற்றிய ப.சிதம்பரம் கருத்தால் காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது. கட்சியின் முக்கியமான தலைவராக இருக்கும் தாங்கள், இக்கருத்தை தவிர்த்திருக்க வேண்டும் எனவும், பொதுவெளியில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். ஆபரேஷன் ப்ளு ஸ்டாரை இந்திராகாந்தி நடத்தியது தவறு என்றும், அதனால்தான் அவரது உயிர் போய்விட்டது எனவும் ப.சிதம்பரம் நேற்று பேசியிருந்தார்.
News October 13, 2025
மழை பெய்யுமா? பின்கோடு தெரிந்தால் போதும்

பின்கோடை உள்ளிட்டால் வானிலை நிலவரத்தை அறிய மத்திய அரசின் ‘<
News October 13, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹5,000 விலை உயர்ந்தது

வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது. இன்று(அக்.13) ஒரே நாளில் கிராமுக்கு ₹5 உயர்ந்ததால் ₹195-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு ₹5,000 அதிகரித்து ₹1,95,000-க்கு விற்பனையாகிறது. தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியில் பலரும் முதலீடு, ஆபரணங்கள் வாங்கத் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் முன்பதிவு செய்த 10 நாள்களுக்கு பிறகே வெள்ளி கிடைக்கும் என வியாபாரிகள் நேற்று அறிவித்திருந்தனர்.