News March 21, 2025
சிக்னல் கோளாறு: புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து புறநகர் செல்லும் ரயில்கள் தாமதமான காரணத்தால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் சிக்னல் காரணமாக நடுவழியில் நிற்பதால், புறநகர் ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பணி முடிந்து வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Similar News
News July 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஜூலை 10 – ஆனி 26 ▶ கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: பவுர்ணமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ பிறை: வளர்பிறை.
News July 10, 2025
கணிக்க முடியாத கேம் சினிமா: இயக்குநர் ராம்

ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ என்ற படம் 4-ம் தேதி வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேசிய ராம் ‘பறந்து போ’ சிறப்பு காட்சியை பார்த்தவர்கள், ராமின் காமெடியை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார். சினிமா என்பது கணிக்க முடியாது கேம் என கூறிய அவர் இப்படியும் நடக்கலாம், அப்படியும் நடக்கலாம் என்றார்.
News July 10, 2025
பால் குடிக்காத குழந்தை… தாய் செய்த கொடூரம்

தாய்மார்களுக்கு ஏற்படும் பிரசவத்துக்கு பிந்தைய மனச்சோர்வை (postpartum depression) நாம் பொருட்படுத்துவதில்லை. இதனால் சில நேரம் விபரீதங்கள் கூட நடக்கலாம். பெங்களூருவில் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை பால் குடிக்காமல் விடாமல் அழுதபடியே இருந்ததால் எரிச்சலடைந்த தாய் ராதா(27), கொதிக்கும் நீரில் குழந்தையை போட்டு கொன்றுள்ளார். இதையடுத்து அவரை போலீஸ் கைது செய்தனர். அவரின் கணவர் மதுவுக்கு அடிமையானவராம்.