News October 19, 2025
சிக்மண்ட் பிராய்ட் பொன்மொழிகள்

*நாம் ஒருவரையொருவர் தற்செயலாகத் தேர்ந்தெடுப்பதில்லை. நம் ஆழ் மனதில் ஏற்கனவே இருப்பவர்களை மட்டுமே நாம் சந்திக்கிறோம். *வரலாறு என்பது வெறுமனே புதிய மக்கள் பழைய தவறுகளைச் செய்வதுதான். *உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்கள் பலம் வெளிவரும். *தனக்குத்தானே முற்றிலும் நேர்மையாக இருப்பது ஒரு நல்ல பழக்கமாகும். *ஒருவரிடம் அவர் விரும்பியது இல்லாதபோது, தன்னிடம் இருப்பதை அவர் விரும்ப வேண்டும்.
Similar News
News October 19, 2025
விஜய்யை சந்திக்க விரும்பும் வெளிநாட்டு தூதர்கள்

இந்தியாவில் நடக்கும் தேர்தல்கள் தொடர்பாக இங்குள்ள வெளிநாட்டு தூதரகங்கள் தங்கள் நாடுகளுக்கு அறிக்கை அனுப்புவது வழக்கம். அந்தவகையில், புதிதாக கட்சி துவங்கியுள்ள விஜய்யை நேரில் சந்தித்து, அவரது கொள்கைகள், CM ஆனால் என்ன செய்வார் உள்பட பலவற்றை அறிந்து கொள்ள வெளிநாட்டு தூதர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கு அனுமதிக்க கோரி, மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுத்தியுள்ளனராம்.
News October 19, 2025
8 மாவட்டங்களில் பேய் மழை வெளுக்கும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News October 19, 2025
சேலையில் வார்த்த வெண்ணிலவாய் ஸ்ருதி

கோலிவுட்டில் தொடங்கிய ஸ்ருதியின் நடிப்பு பயணம், ஆங்கில படங்கள் வரை தொடர்கிறது. ‘7 ஆம் அறிவு’ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், ‘3’ பட ஜனனியை மறவாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டில் ஏராளம். அப்படிப்பட்ட தனது ரசிகர்களுக்காக தீபாவளி ஸ்பெஷல் போட்டோக்களை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பாரம்பரிய உடையின் நளினத்தில் மின்னும் இந்த தமிழ் பெண்ணின் புகைப்படங்களை மேலே Swipe செய்து பாருங்க.