News October 23, 2024
சித்திக் கொலை.. குற்றவாளி 10thஇல் 78% மதிப்பெண்!

ம.பியில் NCP தலைவர் பாபா சித்திக்கை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவரான உ.பி.யின் தர்மராஜ் ராஜேஷ் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தர்மராஜ் 10ஆம் வகுப்பில் 78 சதவீத மதிப்பெண்கள் எடுத்ததாக அவரது அண்ணன் அனுராக் தெரிவித்துள்ளார். தர்மராஜை மருத்துவம் படிக்க வைக்க பெற்றோர் விரும்புவதாகவும், ஆனால் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகவாசத்தால் இப்படி செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.
Similar News
News December 1, 2025
டிட்வா புயல்.. இன்று கனமழை பொழியுமா?

டிட்வா புயல் கரையை கடக்காமல், கடலோரப்பகுதிகள் வழியாக சென்று வலுவிழந்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு மண்டலமாகவோ, தாழ்வுப்பகுதியாகவோ இன்று நிலைகொள்ள வாய்ப்புள்ளது. அவ்வாறு நிலைகொண்டால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழைக்கான சூழல் ஏற்படும். அதன் பிறகு மீண்டும் கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளை நோக்கி வந்து, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிச.19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பொதுப் பயன்பாட்டுக்கான அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட 14 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் SIR பணிகள், டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
News December 1, 2025
ரெப்போ விகிதம் மேலும் குறைகிறது?

ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி, மேலும் 25பிபிஎஸ் குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ரெப்போ விகிதம் 5.5% உள்ளது. டிச.3 முதல் டிச.5 வரை நடைபெறும் RBI-ன் நிதிக்கொள்கை கமிட்டி கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்படவுள்ளது. பணவீக்க அழுத்தங்கள் தணிந்துள்ளதால் இந்த குறைப்பு இருக்கலாம். அதேநேரத்தில் 2-வது காலாண்டில் நாட்டின் GDP 8.2% உயர்ந்திருப்பதால் மாற்றம் இல்லாமலும் போக வாய்ப்புள்ளது.


