News April 15, 2024
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தார்த்

கமல் – மணி ரத்னம் இணையும் ‘தக் ஃலைப்’ படத்திலிருந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த்தும் விலகியதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனை மறுதலிக்கும் வகையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், 5 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற மெக்சிகன் இயக்குநர் அல்போன்சோ குரோன், கமல், ரஹ்மான், அதிதி ராவ் ஆகியோருடன் அவரும் இடம்பெற்றுள்ளார்.
Similar News
News October 23, 2025
ஐசக் நியூட்டனின் பொன்மொழிகள்

*நமக்குத் தெரிந்தவை ஒரு துளி அளவு, நமக்குத் தெரியாதவை ஒரு கடல் அளவு. *தீர்க்கமான அனுமானம் இல்லாமல் பெரிய கண்டுபிடிப்பு எதுவும் நிகழ்த்தப்படவில்லை. *பிழைகள் கலையில் இல்லை, கலைஞர்களில் உள்ளது. *எனது கருவிகளையும் பொருட்களையும் மற்றவர்கள் செய்துதருவார்கள் என்று காத்திருந்திருந்தால், நான் ஒருபோதும் எதையும் செய்திருக்க முடியாது. *ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான மற்றும் எதிரான எதிர்ச்செயல் உண்டு.
News October 23, 2025
CINEMA ROUNDUP: OTTக்கு வந்த அதர்வா படம்

*ரஷ்மிகாவின் ‘தம்மா’ படம் முதல்நாள் இந்தியாவில் ₹25.11 கோடி வசூல்
*துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தின் ‘கண்மணி நீ’ பாடல் வெளியானது
*சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்
*OTT-யில் வெளியானது அதர்வாவின் ‘தணல்’
*விஷ்னு விஷாலின் 25-வது படத்தை ‘லெவன்’ படத்தை இயக்கிய லோகேஷ் அஜ்லீஸ் இயக்கவுள்ளதாக தகவல்
News October 23, 2025
மழையில் பாழாகும் நெல் மூட்டைகள்… யார் பொறுப்பு?

கொள்முதலுக்கு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவதை கண்டு நெஞ்சம் பதறுகிறது. விவசாயிகள் கடன்பட்டு அறுவடை செய்ததை மழையில் இருந்து காப்பாற்ற ஒரு பாதுகாப்பான கிடங்கை கூட அரசால் கட்ட முடியாதா? ஒவ்வொரு கிடங்கிலும் 10,000 மூட்டைகள் பாதுகாப்பின்றி அழிகின்றனவாம். பசி போக்கும் உணவை பாதுகாக்க முடியவில்லை எனில், மாடல் ஆட்சிகளாலும், வல்லரசு பெருமையாலும் என்ன பயன் என மக்கள் கேட்கின்றனர்.