News March 28, 2024
சித்தார்த்-அதிதிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது

நடிகர் சித்தார்த் தனது நீண்ட நாள் காதலியான நடிகை அதிதியை நிச்சயம் செய்து கொண்டார். நீண்ட நாள்களாக காதலித்து வந்த இருவரும், நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக செல்வதுண்டு. ஆனால், தங்கள் காதல் உறவை குறித்து எங்குமே உறுதிபடுத்தவில்லை. இதனிடையே, நேற்று இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக இணையத்தில் தகவல் பரவி வந்த நிலையில், இன்று தாங்கள் நிச்சயம் செய்து கொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
Similar News
News January 8, 2026
வடமதுரை அருகே வசமாக சிக்கிய இளைஞர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வேல்வார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா (70). இவர் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆட்டை, திருடிச் சென்றனர். இதனையடுத்து ஆடு திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல் RVS நகரைச் சேர்ந்த வினோத் (28) மற்றும் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த அஸ்கர் மீரான் (21) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து
ஆட்டை மீட்டனர்.
News January 8, 2026
அன்புமணி எனக்கே வேட்டு வைத்துவிட்டார்: ராமதாஸ்

பாமக (அன்புமணி) NDA கூட்டணியில் இணைந்துள்ளதாக நேற்று EPS அறிவித்தார். இந்நிலையில், நேற்று நடந்தது ஒரு கூத்து என ராமதாஸ் விமர்சித்துள்ளார். பாமகவை உரிமை கொண்டாட அன்புமணிக்கு தகுதி இல்லை என்ற அவர், தனது தலைமையிலான பாமக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார். எதிர்ப்புகளை மீறி மத்திய அமைச்சராக்கிய தனக்கே அன்புமணி வேட்டு வைத்துவிட்டதாகவும் ராமதாஸ் சாடியுள்ளார்.
News January 8, 2026
செந்தில்பாலாஜி போல் KN நேரு கைதாகிறாரா?

நகராட்சி நிர்வாகத்துறையில் ₹1,020 கோடி முறைகேடு புகார் தொடர்பாக ED எழுதிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை(DVAC) விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது அமைச்சர் KN நேருக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்படி விசாரணையை எதிர்கொள்வேன் என KN நேரு ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும், செந்தில் பாலாஜியை போல் நேருவையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என பேச்சு எழுந்துள்ளது.


