News March 27, 2024
சித்தார்த் – அதிதி ரகசிய திருமணம்

நடிகர் சித்தார்த் தனது நீண்ட நாள் காதலியை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. நடிகை அதிதி ராவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர், இன்று தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகாததால், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 28, 2025
விஜய்க்கு இலங்கையில் இருந்து வந்த ஆதரவு

சினிமா, விஜய்யை மிகவும் மிஸ் செய்யும் என இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜ்பக்சவின் மகன், நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சினிமா துறையில் விஜய்யின் ஆற்றலை அனைவரும் அறிவார்கள் என்று கூறியுள்ள அவர், தனது பயணத்திற்கு முடிவுரை எழுதிவிட்டு புதிய பயணத்தை விஜய் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 28, 2025
ODI-ல் கம்பேக் கொடுக்கிறாரா இஷான் கிஷன்?

நியூசிலாந்து அணிக்கு எதிரான ODI தொடரில், இஷான் கிஷன் இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வரும் அவருக்கு, மீண்டும் வாய்ப்பளிக்க BCCI முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள T20I WC அணியிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இஷான் கிஷன், 2023 WC அணியில் இடம் பெற்றிருந்தார்.
News December 28, 2025
விஜயகாந்த் நினைவிடத்தில் உதயநிதி உருக்கம்

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் DCM உதயநிதி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பாஜக நிர்வாகிகள் முதலில் அஞ்சலி செலுத்திய நிலையில், அதிமுக தலைவர்கள் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


