News April 27, 2024

மோடியின் குற்றச்சாட்டுக்கு சித்தராமையா பதிலடி

image

ஓபிசி இடஒதுக்கீடு குறித்து மோடி பொய் பேசுவதாக சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஓபிசி இடஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் அரசு அளித்து விட்டதாக மோடி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்த சித்தராமையா, அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி, சமூக ரீதியில் பின்தங்கிய அனைவருக்கும் இடஒதுக்கீடு என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது, மதம் குறித்து தெரிவிக்கப்படவில்லை என்றார்.

Similar News

News January 26, 2026

TN பெருமையை பறைசாற்றிய அலங்கார ஊர்திகள் (PHOTOS)

image

சென்னையில் நடைபெற்ற <<18959672>>குடியரசு தின நிகழ்ச்சியில்<<>>, தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்டவைகளின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனை கவர்னர் RN ரவி, CM ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

News January 26, 2026

FLASH: தமிழறிஞர் ஞானசுந்தரம் காலமானார்

image

தமிழறிஞரும், எழுத்தாளருமான ஞானசுந்தரம்(84) உடல் நலக்குறைவால் காலமானார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்து தமிழ் இலக்கியத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்காற்றியவர். சைவம், வைணவம், இலக்கிய நூல்கள் பலவற்றை எழுதியுள்ள இவருக்கு TN அரசு இலக்கிய மாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவரது மறைவுக்கு வைரமுத்து, அண்ணாமலை உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News January 26, 2026

கிரெடிட் கார்டு பில் கட்டலனா கைது செய்வார்களா?

image

கிரெடிட் கார்டு பில்லை நீண்டகாலமாக கட்டவில்லை என்றால், அது முதலில் சிவில் குற்றமே, கைது செய்ய முடியாது. வங்கி தரப்பில் முதலில் மெசேஜ், மெயில் அல்லது நேரடியாக ஆள்களை அனுப்பி விசாரிக்கும். நீண்டகாலமாக எதற்கும் பதிலளிக்கவில்லை என்றால், வங்கி சிவில் கோர்ட்டுக்கு செல்லலாம். விசாரணையில் வேண்டுமென்றே பில்லை கட்டவில்லை என நிரூபிக்கப்பட்டால், அது குற்ற சம்பவமாக மாறும். அப்போது சிறை தண்டனை வழங்கப்படலாம்.

error: Content is protected !!