News October 19, 2025
சேலையில் வார்த்த வெண்ணிலவாய் ஸ்ருதி

கோலிவுட்டில் தொடங்கிய ஸ்ருதியின் நடிப்பு பயணம், ஆங்கில படங்கள் வரை தொடர்கிறது. ‘7 ஆம் அறிவு’ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், ‘3’ பட ஜனனியை மறவாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டில் ஏராளம். அப்படிப்பட்ட தனது ரசிகர்களுக்காக தீபாவளி ஸ்பெஷல் போட்டோக்களை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பாரம்பரிய உடையின் நளினத்தில் மின்னும் இந்த தமிழ் பெண்ணின் புகைப்படங்களை மேலே Swipe செய்து பாருங்க.
Similar News
News October 19, 2025
ரஷித் கானின் செயலால் பாகிஸ்தான் அதிர்ச்சி

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 ஆப்கன் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியான சம்பவத்தை கடுமையாக சாடியிருந்தார் ரஷித் கான். இதன் தொடர்ச்சியாக தன்னுடைய X-ன் பயோவில் இருந்த Lahore Qalandars அணியின் பெயரை நீக்கியுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தான் இடம்பெற்றிருந்த அணியின் பெயர்தான் Lahore Qalandars. இதனால், PSL-ல் அவர் இனி விளையாடமாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News October 19, 2025
மழை சீசனில் இந்த கசாயம் குடிங்க!

மழைக் காலத்தில் கடும் இருமலால் பாதிக்கப்படுபவர்கள் இந்த கசாயத்தை குடிக்கும்படி, சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் *முதலில் முளைக்கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும் *ஒரு பாத்திரத்தில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி, அதில் அதிமதுரம் & மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும் *நீர் நன்கு கொதித்ததும், அதை வடிகட்டி குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கு பகிரவும்.
News October 19, 2025
கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகியது

INDIA கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மியை தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் விலகியுள்ளது. பிஹார் தேர்தலில் சக்காய், தம்தாஹா, பிர்பைன்டி, ஜமுய், மணிஹரி, கட்டோரியா ஆகிய பழங்குடி மக்கள் அதிகம் உள்ள 6 தொகுதிகளில் அக்கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இது, ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. JMM-ன் முடிவால் NDA தலைவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.