News April 2, 2025

வெற்றி சின்னத்தை காட்டும் ஸ்ரேயாஸ்

image

பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல்லில் முக்கிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அணியை அதிகமுறை வெற்றி பெறச் செய்த கேப்டன்களின் வரிசையில் அவர் 3ஆம் இடம் பிடித்துள்ளார். இதுவரை 72 போட்டிகளுக்கு தலைமை தாங்கிய அவர், 55.5% வெற்றிகளைப் பெற்றுத்தந்து, ரோஹித்தை (55.06%) முந்தியுள்ளார். இந்த பட்டியலில் தோனி (58.84%) முதலிடத்திலும், சச்சின் (58.82%) 2ஆம் இடத்திலும் உள்ளனர்.

Similar News

News April 3, 2025

இந்தியாவிடம் இத்தனை அணு ஆயுதங்களா..!

image

அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு நடத்திய ஆய்வின் படி, டாப் 9 அணு ஆயுதம் கொண்ட நாடுகள் கூட்டாக 12,331 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன. இந்த பட்டியலில் 180 அணு ஆயுதங்களுடன் இந்தியா 6ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. 5,499 அணு ஆயுதங்களுடன் ரஷ்யா முதலிடத்தையும், 5,277 அணு ஆயுதங்களுடன் அமெரிக்கா 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. சீனா (600) 3ஆம் இடத்தையும், பாகிஸ்தான் (170) 7ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.

News April 3, 2025

அணி மாறும் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

image

சவுதியின் ‘அல் நாசர்’ அணியில் இருக்கும் ரொனால்டோ, கிளப் உலககோப்பை தொடரில் வேறோரு அணிக்காக விளையாட இருக்கிறார். ‘பிபா’ அணிகளின் ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்கள் மற்ற கிளப் அணிகள் சேர்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கவுள்ளது. இதன் காரணமாகவே, ரொனால்டோ தனது ‘அல் நாசர்’ அணி, ஒப்பந்ததை இன்னும் புதுப்பிக்காமல் வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அவர் எந்த அணிக்காக களமிறங்குவார் என நீங்க நினைக்கிறீங்க?

News April 3, 2025

20 மாவட்டங்களில் மழை தொடரும்: IMD

image

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திண்டுக்கல், தேனி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!