News September 5, 2025

Red Retro வைப்பில் ஸ்ரேயா கிளிக்ஸ்

image

சிம்ரனுக்கு பிறகு, இலியானாவுக்கு முன்பு இடையழகால் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் ஸ்ரேயா. கடைசியாக ‘ரெட்ரோ’ படத்தின் ‘Love Detox’ பாடலில் நடனமாடியிருந்தார். இந்நிலையில் சிவப்பு நிற சேலையில் சில லேட்டஸ்ட் Stunning லுக் போட்டோஸை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை ஹார்ட்டின்களை பறக்க வைத்துள்ளார். ஸ்ரேயா நடிப்பில் உங்களுக்கு பிடித்த படம் எது?

Similar News

News March 13, 2026

OBC கிரீமி லேயர் ஒதுக்கீட்டில் SC முக்கிய தீர்ப்பு

image

பிற்படுத்தப்பட்டோருக்கான(OBC) கிரீமி லேயர் நிலையை பெற்றோரின் வருமானத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது என்று SC தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை, சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், பெற்றோரின் வருமானத்தை காரணம் காட்டி பணி நியமனம் மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு இது நிம்மதியை அளித்துள்ளது. அவர்களின் நியமனங்களை மறுத்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்களை SC தள்ளுபடி செய்துள்ளது.

News March 13, 2026

OBC Creamy Layer & Non- Creamy Layer என்றால் என்ன?

image

OBC பிரிவினருக்கான மத்திய அரசின் இடஒதுக்கீட்டில் Creamy Layer/Non-Creamy Layer என 2 அடுக்குகள் உள்ளன. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியடைந்து ஆண்டு வருமானம் ₹8 Lak-க்கு மேல் உள்ளவர்கள் Creamy Layer-ல் வருவார்கள். அவர்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது. ஆண்டுக்கு ₹8 Lak-க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் Non-Creamy Layer-ல் வருவார்கள். இவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

News March 13, 2026

கேஸ் சிலிண்டர்.. முற்றிலும் முடங்கப்போகுது

image

சிலிண்டர் தட்டுப்பாட்டால் சிறு, குறு தொழில்கள் 2 நாள்களுக்குள் முற்றிலும் முடங்கவுள்ளதாக MSME முன்னாள் தலைவர் ரகுநாதன் தெரிவித்துள்ளார். மூலப்பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும், தயார் நிலையில் உள்ள பொருள்களையும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், மூலப்பொருள்கள் விலை உயர்வால் திருப்பூரில் சாய ஆலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!