News February 22, 2025
Oyo ஹோட்டல்களுக்கு போகக் கூடாதா? #BoycottOyo

கடவுளைக் கேலிப்பொருளாக விளம்பரங்களில் பயன்படுத்தியதாகக் கூறி Oyo ஹோட்டல்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. செய்தித்தாள்களில் அவர்கள் வெளியிட்டிருந்த விளம்பரத்தில், ”கடவுள் எங்கேயும் இருக்கிறார். அப்படிதான் Oyoவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது எப்படி நீங்கள் Oyo ஹோட்டலை கடவுளோடு ஒப்பிடலாம் என்று சிலர் X தளத்தில் #BoycottOyo tag-ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Similar News
News February 22, 2025
தவெக ஆண்டு விழா: பாஸ் அனுப்ப விஜய் உத்தரவு

தவெகவின் முதலாம் ஆண்டு விழா வரும் 26 ஆம் தேதி ஈசிஆரில் உள்ள Confluence Centre-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நிர்வாகிகள் 2 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் முறையாக அழைப்பிதழும், ஆண்டு விழாவுக்கான பாஸூம் வழங்குமாறு தவெகவின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனால், தவெகவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர்
News February 22, 2025
‘APPA’ செயலியை அறிமுகம் செய்த CM ஸ்டாலின்

பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் APPA(Anaithu Palli Parents teachers Association) செயலியை CM ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலி மூலம் அரசுப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மாணவர்களுக்கான தேவைகளை இதில் பதிவிடலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக முதல்வர் ஸ்டாலினை ‘அப்பா’ எனக் குறிப்பிட்டு போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.
News February 22, 2025
இந்தியா மீது விரைவில் வரி விதிப்பேன்: டிரம்ப்

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவில் பரஸ்பர வரி விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நாடுகள் அமெரிக்க பொருள்களுக்கு எவ்வளவு வரிகளை விதிக்கின்றனவோ, அதே அளவு வரியை அமெரிக்காவும் விதித்து நியாயமான முறையில் செயல்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் கால் பதிக்க உள்ள நிலையில், தொழில் செய்வதற்கு இந்திய கடினமான நாடு எனவும் தெரிவித்துள்ளார்.