News October 3, 2025
விஜய்யை கைது செய்யணுமா? பார்த்திபன் பதில்

சினிமா துறையில் இருப்பவர்களுக்கு சமூக பொறுப்பு தேவை, ஏனென்றால் மக்கள் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கின்றனர் என பார்த்திபன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கரூர் துயரம் தொடர்பாக விஜய்யை கைது செய்ய வேண்டுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு, இப்படி பேசுவது அத்துமீறல் என்றார். இச்சம்பவம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது, நீதிபதி உள்ளார், விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும் என கூறினார்.
Similar News
News October 3, 2025
முதல் நாளில் ₹80 கோடி வசூலித்த ‘காந்தாரா’

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ முதல் நாளில் உலகளவில் சுமார் ₹80 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. அக்.1-ம் தேதி ப்ரீமியர் காட்சிகளுடன், நேற்று வெளியான ‘காந்தாரா’ படம் இந்திய அளவில் ₹60 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இப்படம் கர்நாடகாவில் ₹25-30 கோடி, இந்தி டப்பிங்கில் ₹19-21 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. நீங்க படம் பார்த்துட்டீங்களா?
News October 3, 2025
BREAKING: உருவாகிறது புயல்

வடகிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என IMD கணித்துள்ளது. புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
News October 3, 2025
CM ஸ்டாலின் வரலாற்றை மறக்கக்கூடாது: வானதி

கலைஞர் நாணயத்தை வெளியிட்டவர்களும் RSS-ஐ சேர்ந்தவர்கள் என்பதை CM ஸ்டாலின் உணர வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். RSS நாணையத்தை PM மோடி வெளியிட்டதை CM ஸ்டாலின் சாடியிருந்தார். அதற்கு பதிலளித்த வானதி, தனது கொள்கைகளுக்கு RSS செயல் வடிவம் கொடுத்துள்ளது என காந்தியே பாராட்டியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வரலாற்றை CM-க்கு நினைவூட்ட விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.