News January 24, 2025
இந்த Blood Group உடையவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாதா?

அசைவம் சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமானது. ஆனால், சில Blood Group உடையவர்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். Blood Group A இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் சென்சிட்டிவாக இருக்குமாம். மேலும், இறைச்சி சாப்பிட்டால், செரிமானமாவது கடினமானதாக இருக்கும் என்கிறார்கள். அதனால் அவர்கள் காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
Similar News
News August 27, 2025
விஜய் கூட்டணி வியூகம்.. திமுக அதிர்ச்சி

TVK யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் விஜய் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வாக்குத் திருட்டை கண்டித்து பிஹாரில் நடைபெறும் 16 நாள் பிரச்சாரப் பேரணியில் விஜய் பங்கேற்க முயல்வதாகவும், காங்., உடனான கூட்டணிக்கு இப்பேரணியில் பங்கேற்றால் பலனளிக்கும் என விஜய் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் முயற்சி சரியா கமெண்ட் பண்ணுங்க.
News August 27, 2025
Tax Vs Tariff.. என்ன வித்தியாசம்?

USA-ன் வரிவிதிப்பு தொடர்பான செய்திகளில் ‘Tariff’ என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். இந்நிலையில், இதற்கும் Tax-க்கும் என்ன வித்தியாசம் என்று தற்போது பார்க்கலாம். Tax என்பது அரசுக்கு வரி செலுத்துவோர் மீது விதிக்கப்படும் கட்டணம் ஆகும். இது நேரடி வரி, மறைமுக வரி என இரு வகைப்படும். Tariff என்பது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் ஆகும்.
News August 27, 2025
அஸ்வினுக்கு நெகிழ்ச்சியுடன் பிரியா விடை அளித்த CSK

அஸ்வினை ‘கேரம் பால் திரிபுர சுந்தரன்’ என வர்ணித்து CSK நிர்வாகம் பிரியாவிடை அளித்துள்ளது. CSK-ன் பாரம்பரியத்தை தூணாக நிறுத்தி, சேப்பாக்கத்தை ஒரு கோட்டையாக கர்ஜிக்க வைத்ததாகவும், சூப்பர் கிங்காக தொடங்கிய அவரது பயணம், ஒரு சூப்பர் கிங்காகவே முடிந்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், என்றென்றும் அவர் சிங்கம் தான் எனவும், என்றென்றும் அவர் நம்மில் ஒருவர் தான் என்றும் கூறியுள்ளது.