News November 29, 2024
75 வயதுக்கு மேற்பட்டோர் வரி செலுத்த வேண்டாமா? விளக்கம்!

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என்று, மத்திய அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வரி செலுத்த தேவையில்லை என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என மத்திய அரசின் PIBFactCheck நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
Similar News
News August 20, 2025
BREAKING: தவெக மாநாட்டுக்கு புதிய சிக்கல்

மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிகளை 1 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தவெக மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது, தொடர்பாக ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், மாநிலம் முழுவதும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் கொடிகள், பேனர்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.
News August 20, 2025
PM, CM பதவி பறிப்பு மசோதா: ஸ்டாலின் கண்டனம்

30 நாள்கள் சிறையில் இருந்தால், PM, CM பதவியை பறிக்கும் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு கருப்பு நாள், கருப்பு மசோதா என குறிப்பிட்ட அவர், இதுவே சர்வாதிகாரத்தின் தொடக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாக்கு திருட்டு விவகாரத்தை திசைதிருப்பவே இம்மசோதா கொண்டுவரப்பட்டதாகவும், ஜனநாயகத்தை அழிக்கும் மசோதா என்றும் தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
ரஷ்ய கச்சா எண்ணெயால் யாருக்கு லாபம்?

ரஷ்யாவிலிருந்து <<17464064>>மலிவு விலையில்<<>> வாங்கும் கச்சா எண்ணெயால், உண்மையில் பலனடைவது யார்? பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்காததால், அதன்மூலம் அரசும், தனியார் நிறுவனங்களும் நேரடியாக லாபமடைகின்றன. மேலும், அதிக விலைக்கு ஏற்ப, வரியும் அதிகம் வசூலிக்கப்படுகிறது. தவிர, இந்த எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோலிய பொருள்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, தனியார் நிறுவனங்கள் கூடுதல் லாபம் பார்க்கின்றன. மக்களுக்கு?