News October 12, 2025
குழந்தைகள் தானாகவே Home Work செய்யணுமா?

Home Work செய்யமாட்டேன் என உங்கள் பிள்ளைகள் அடம்பிடிக்கின்றனரா? அவர்களை வழிக்கு கொண்டு வர சில டெக்னிக் இருக்கிறது. ➤Home Work செய்ய குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள் ➤அவர்கள் விரும்பும் இடத்தில் படிக்க அனுமதியளியுங்கள் ➤படிக்கும் முன் விளையாட செல்லட்டும் ➤Home work-ஐ செய்து முடித்தால் பாராட்டி, பரிசு கொடுங்கள் ➤குழந்தைகள் அழுது அடம்பிடித்தால், விட்டு பிடியுங்கள். அடிக்கவோ, திட்டவோ வேண்டாம். SHARE.
Similar News
News October 13, 2025
வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா

மகளிர் உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 331 ரன்கள் இலக்கை எட்டிய நிலையில், மகளிர் ODI-ல் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுதான். 142 ரன்கள் அடித்து ஆஸி., கேப்டன் அலிசா ஹீலி வெற்றிக்கு வித்திட்டார். உலகக்கோப்பை லீக் சுற்றில் தோல்வியையே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையை ஆஸி., தக்க வைத்துள்ளது.
News October 13, 2025
43 ஆண்டுகளாக அதிபராக இருப்பவர்… மீண்டும் போட்டி

கேமரூன் நாட்டின் அதிபர் பவுல் பியா 8-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? 92 வயதான அவர் 1982 முதல் அந்நாட்டின் அதிபராக இருக்கும் நிலையில் மீண்டும் களமிறங்குகிறார். ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு இரண்டே அதிபர்கள் தான் இருந்துள்ளனர். 1960-82 வரை அஹ்மத் அஹிட்ஜோ, அடுத்து பவுல் பியா. இன்று நடைபெறும் தேர்தலில் பியா வென்றால் மேலும் 7 ஆண்டுகளுக்கு அதிபராக இருப்பார்.
News October 13, 2025
கட்டி பிடித்ததற்கு ₹3.72 லட்சம் கேட்ட மணப்பெண்

நிச்சயம் பண்ணிட்டா உடனே கல்யாணத்த முடிச்சிரனும், இல்லைனா சண்ட போட்ருவாங்க என்ற பேச்சு சீனாவில் உண்மையாகியுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பெண், தனக்கு கணவராக வருபவர் மிகவும் நேர்மையாக உள்ளார், வருமானம் குறைவாக உள்ளது என கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். மாப்பிள்ளை வீட்டார் செய்த ₹24.83 லட்சத்தை திருப்பி தர சம்மதித்த மணப்பெண், தன்னை கட்டி பிடித்ததற்காக ₹3.72 லட்சத்தை மாப்பிளையிடம் கேட்டுள்ளாராம்.