News January 22, 2025
அண்ணாமலை நீக்கமா.. மேலிடம் சொல்வதென்ன?

TN BJP தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டதாகப் பரவும் தகவலில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. அண்ணாமலை நீக்கப்பட்டதாக X தளத்தில் Verified டிக் வாங்கியுள்ள சில கணக்குகளிலிருந்து தகவல் பதிவிடப்பட்டது. அதனை, உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மேலிடத்தில் விசாரித்தபோது, இது முற்றிலும் வதந்தி எனவும், அவருக்கு எதிரான வன்மம் என்றும் மறுத்துள்ளனர்.
Similar News
News December 6, 2025
அவர்களின் இலக்கு நேரு அல்ல: சோனியா காந்தி

சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பையும் செய்யாதவர்கள், நேருவை நாட்டின் எதிரியாக கட்டமைக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக சோனியா காந்தி சாடியுள்ளார். நேருவை வரலாற்றில் இருந்து நீக்குவது அவர்களது முக்கிய இலக்கு அல்ல. அவர் ஏற்படுத்திய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளை சிதைப்பதுதான் இலக்கு. நேருவை ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது என்பது வேறு, இது வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
பாடங்களுடன் கலையையும் கற்பிக்க வேண்டும்: அன்புமணி

<
News December 6, 2025
திங்கள்கிழமை பள்ளிகள் இங்கு விடுமுறை

ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கையொட்டி, டிச.8-ம் தேதி (திங்கள்கிழமை) காஞ்சிபுரம் மாநகரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்நாளில், அங்குள்ள 113 பள்ளிகள் செயல்படாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தமிழகத்தில் டிச.12 வரை மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. மழைப்பொழிவை பொறுத்து பிற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.


