News October 30, 2025

‘விக்ரம் 63’ படத்தை இயக்கும் குறும்பட இயக்குநர்

image

‘விக்ரம் 63’ படத்தை ‘மாவீரன்’ பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு குறும்படத்தை இயக்கி புகழ் பெற்ற அறிமுக இயக்குநர் தான் விக்ரம் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாயகியாக மீனாட்சி சவுத்ரியும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News October 30, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 30, ஐப்பசி 13 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 130 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை

News October 30, 2025

மியான்மர் அகதிகளுக்கு அச்சுறுத்தலா? இந்தியா மறுப்பு

image

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இச்சம்பவத்தில் இந்தியாவில் உள்ள மியான்மர் மக்கள் அதிகாரிகளால் அச்சுறுத்தபட்டதாக, ஐநாவின் 3-வது குழு குற்றஞ்சாட்டியது. இதனை இந்தியா மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று MP திலீப் சைகியா ஐநாவில் தெரிவித்துள்ளார். மியான்மருக்கு இந்தியா செய்த உதவிகளையும், இணக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

News October 30, 2025

PCB-யிடம் முரண்டு பிடிக்கும் ரிஸ்வான்

image

ODI கேப்டன் பொறுப்பிலிருந்த நீக்கப்பட்ட பாக்., வீரர் முகமது ரிஸ்வான், தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில், பாக்., கிரிக்கெட் வாரியத்தின் (PCB) மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரிஸ்வான் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் & டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான விளக்கத்தை PCB-யிடம் அவர் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!