News May 5, 2024

தமிழ்நாடு முழுவதும் இன்று கடைகள் இயங்காது

image

வணிகர் தினத்தையொட்டி, தமிழகத்தின் பெரும்பாலான கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இதில் வணிகர் சங்கங்களை சார்ந்த லட்சக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்பதால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக மையங்களும் இன்று மூடப்பட்டிருக்கும்.

Similar News

News December 14, 2025

மீண்டும் அஜித்துடன் இணையும் ரெஜினா கசாண்ட்ரா

image

‘AK 64’ படத்தில் ரெஜினா கசாண்ட்ரா முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இவர் அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. மேலும் இப்படத்தில் ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரேஸிங்கில் உள்ள அஜித் உடன் ஆதிக்கும் சில நேரங்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News December 14, 2025

ராசி பலன்கள் (14.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News December 14, 2025

நடப்பாண்டு சட்டப்பேரவை முடித்து வைப்பு: RN ரவி

image

ஜன.6, 2025-ல் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைத்து கவர்னர் RN ரவி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான கவர்னரின் அறிவிப்பாணை, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, அடுத்தாண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவதற்கான தேதியை அமைச்சரவை முடிவு செய்து கவர்னருக்கு பரிந்துரை செய்யும். இது 2026-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் உரையுடன் தொடங்கும்.

error: Content is protected !!