News August 5, 2025
ஷூட்டிங் ஓவர் பாஸ்… SK செம ஹேப்பி

சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதால் ‘பராசக்தி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொள்ளாச்சியில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட நிலையில், தற்போது படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்படுகிறது. ‘பராசக்தி’ ஜனநாயகனுடன் மோத உள்ளதாக கூறப்படுவதால் பொங்கலுக்கு டபுள் ட்ரீட் உள்ளது.
Similar News
News August 5, 2025
முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முருங்கைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய கொள்முதல் நிலையமான ஒட்டன்சத்திரத்தில் கடந்த மாதம் கிலோ ₹70-க்கு விற்கப்பட்ட முருங்கை விலை இன்று வெறும் ₹8-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், போட்ட முதலீடு கூட கிடைக்கவில்லை எனப் புலம்புகின்றனர்.
News August 5, 2025
சற்றுமுன்: மூன்று பெண் குழந்தைகள் கொடூர கொலை

தமிழகத்தை அதிரவைக்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மூன்று கொலைகள் கொடூரமாக அரங்கேறியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வீடு கட்ட வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், மனைவி & மகனை ஒரு அறையில் பூட்டிவைத்துவிட்டு, 9, 7, 3 வயதுடைய மூன்று மகள்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின், தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
News August 5, 2025
அமளி நீடித்தால் விவாதமே கிடையாது: கிரண் ரிஜிஜூ

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எதிர்க்கட்சிகள், இதுகுறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி, நாடாளுமன்றத்தை முடக்கின. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால், விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்துள்ளார்.