News May 14, 2024
இறுதிக்கட்டத்தில் ‘G.O.A.T’ படப்பிடிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘G.O.A.T’ படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. யுவன் இசையில் கடந்த மாதம் வெளியான ‘விசில் போடு’ பாடல், வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Similar News
News March 10, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கண் அழியாமை ▶குறள் எண்: 628 ▶குறள்: இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். ▶பொருள்: இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.
News March 10, 2026
மனைவிக்கு உருக்கத்துடன் நன்றி சொன்ன சஞ்சு சாம்சன்

டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமான சஞ்சு சாம்சன் தன் மனைவி சாருலதாவுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். என் வாழ்க்கையில் கிரிக்கெட் எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டு, அதை உங்களுக்கானதாகவும் மாற்றியதற்கு நன்றி என கூறியுள்ளார். என் வாழ்க்கையின் சிறந்த பக்கத்தை விட மோசமான பக்கத்திலும் இன்னும் ஆதரவாக நின்றீர்கள்; மிக்க நன்றி, என் அன்பான பொண்டாட்டி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 10, 2026
விஜய் கூட்டணி வைத்தால் 100% வெற்றி உறுதி: ஜெகன் மூர்த்தி

விஜய்யின் தவெக NDA கூட்டணிக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்போம் என பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், விஜய் NDA கூட்டணிக்கு வருவது உண்மையா என தெரியவில்லை. இதுவரை வதந்தியாகவே உள்ளது என்றார். ஒருவேளை விஜய் கூட்டணி வைத்தால் 100% வெற்றி உறுதி எனவும், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் NDA கூட்டணி தான் வெற்றிபெறும் என்றும் கூறியுள்ளார்.


