News October 12, 2025
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில், பள்ளி மைதானத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகி உள்ளனர். Football போட்டியின் போது, மைதானத்தில் திடீரென உள்ளே புகுந்த 18 வயது இளைஞர், சரமாரியாக சுட தொடங்கியுள்ளார். இதில், 12 பேர் காயமடைந்த நிலையில், 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் துப்பாக்கிச்சூட்டில் மட்டும் சுமார் 17,000 பேர் இறப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News October 12, 2025
BREAKING: தீபாவளி விடுமுறை.. அமைச்சர் முக்கிய அறிவிப்பு

தீபாவளி விடுமுறையையொட்டி ஆம்னி பஸ் டிக்கெட் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்தால் <<17984664>>கடும் நடவடிக்கை<<>> எடுக்கப்படும் என எச்சரித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பல ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் ஆம்னி பஸ் உரிமையாளர்களை அழைத்து இதுகுறித்து பேசவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News October 12, 2025
ஆப்கான் தாக்குதலில் 58 பாக்., வீரர்கள் பலி

காபுலில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் எல்லையோர முகாம்களை நோக்கி ஆப்கானிஸ்தான் சரமாரி தாக்குதலை மேற்கொண்டது. இதில் 25 பாகிஸ்தான் ராணுவ முகாம்களை கைப்பற்றியதாக கூறும் ஆப்கன், 58 பாக். ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் 9 ஆப்கான் வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
News October 12, 2025
தங்க நகைகளை பிங்க் பேப்பரில் வைத்து தருவது ஏன்?

நகைக் கடைகளில் வெள்ளி அல்லது தங்கம் வாங்கும்போது அதை பிங்க் நிற காகிதத்தில் மடித்து தருவது வழக்கம். இதன் பின்னணியில் விஞ்ஞான காரணங்கள் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இதற்கு பின்னால் வியாபார யுக்தி மட்டுமே உள்ளது. அதாவது பிங்க் நிறத்துக்கு வெள்ளி மற்றும் தங்க நகைகளை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், பிரகாசமாகவும் காட்டும் தன்மை உள்ளதாம்.