News April 9, 2025

ஜிம் செல்பவர்களுக்கு ஷாக் நியூஸ்… உஷாரா இருங்க!

image

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்பும் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. சென்னை காசிமேட்டில் ஜிம் பயிற்சியாளர் பரிந்துரைப்படி ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்ட 35 வயது நபர் உயிரிழந்துள்ளார். சீக்கிரமே உடலை கட்டுமஸ்தாக மாற்ற இவ்வாறு செய்தது விபரீதத்தில் முடிந்திருக்கிறது. இயற்கையான முறையில் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதே சிறந்தது என்பதை ஜிம் செல்பவர்கள் உணர வேண்டும்.

Similar News

News April 17, 2025

வக்ஃப் திருத்த சட்டபடி புதிய உறுப்பினர் நியமனம் கூடாது: SC

image

வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என சுப்ரீம் கோர்ட்(SC) உத்தரவிட்டுள்ளது. மேலும், வக்ஃப் என பதியப்பட்ட, அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது புதிய சட்டத்தின் கீழ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

News April 17, 2025

நில ஆவணங்களை எளிதாக அறிய புதிய செயலி!

image

நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை, அறிய புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது. செல்போனில், ‘Tamilnilam Gioinfo’ செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில், தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ, அந்த இடத்தின், கூகுள் மேப்புடன், சர்வே எண் விவரங்கள் டிஸ்பிளே ஆகும். அடுத்த சில மாதங்களில், இந்த செயலி செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இது வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்க்க உதவும்.

News April 17, 2025

சம்மரில் கிச்சன் உஷ்ணம் இன்றி இருக்க.. சூப்பர் டிப்ஸ்!!

image

கோடை காலத்தில் கிச்சனில் சமைக்கும் போது, உடலின் உஷ்ணத்தை குறைக்க சூப்பர் டிப்ஸ்: சீக்கிரமாக தயாராகும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சமைக்கலாம் *சமைக்கும் போது, ஜன்னலை திறந்து வையுங்கள். Exhaust ஃபேனை பயன்படுத்துங்கள் *உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள அடிக்கடி தண்ணீர், பழச்சாறுகளை பருகுங்கள் *ஃப்ரை பண்ணி சாப்பிடும் உணவுகளை தவிர்ப்பது, உஷ்ணத்தையும் குறைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

error: Content is protected !!