News August 25, 2025
தங்க நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி தகவல்

14 காரட், 18 காரட் தங்க நகைகளை 22 காரட் எனக் கூறி வணிகர்கள் விற்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கீகரிக்கப்படாத வணிகர்கள் ஹால்மார்க் முத்திரையில் மோசடி செய்கிறார்களாம். நகை வாங்குபவர்கள் BIS CARE ஆப்பில் வணிகர்களின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரை பரிசோதிப்பது நல்லது. இதன்மூலம், தரமான நகை வாங்குவதை உறுதி செய்யலாம். (14 காரட்டில் 58.5%, 18 காரட்டில் 75%, 22 காரட்டில் 91.6% தங்கம் இருக்கும்) SHARE IT.
Similar News
News August 25, 2025
கட்சியில் இருந்து கூண்டோடு விலகல்

கரூரில் கட்சியில் இருந்து கூண்டோடு விலகியது தேமுதிகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட செயலாளர் <<17504956>>அரவை முத்து<<>>, அதிமுகவில் இணைந்த நிலையில், அவரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் இணைந்துள்ளனர். மாவட்ட அவை தலைவர் ரங்கநாதன், குளித்தலை நகரச் செயலாளர் சுப்பிரமணியன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சின்னசாமி, கடவூர் ஒன்றிய செயலாளர் ஆல்வின் உள்ளிட்ட 200 பேர் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
News August 25, 2025
பள்ளி மாணவன் மயங்கி விழுந்து மரணம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய வழியில், மாணவன் நல்லமுத்து மயங்கி விழுந்துள்ளான். அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், நல்லமுத்து உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
News August 25, 2025
கூலிக்கு U/A சான்று… கிடைக்குமா ? கிடைக்காதா ?

கூலி படத்திற்கு U/A சான்று கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. Madras HC-ல் நடந்த விசாரணையில் படங்களுக்கு சான்று வழங்கும் போது சாதாரண மனிதனின் பார்வையில் இருந்து அணுக வேண்டும் எனவும் வன்முறையை ஊக்குவிப்பது தங்கள் நோக்கமல்ல எனவும் படக்குழு தரப்பு வாதிட்டது. இதற்கு சென்சார் போர்டு தரப்பு கூலியில் கொடூர கொலை, அதிக வன்முறை இருந்ததால் A சான்று தரப்பட்டதாக தெரிவித்தது. நீங்க படம் பார்த்துட்டீங்களா?