News April 13, 2025

மாயாவதி குடும்பத்தில் அதிர்ச்சி சம்பவம்

image

BSP கட்சித் தலைவர் மாயாவதியின் சகோதரர் மகள், ஆலீஸ். தன் மாமியார் ₹50 லட்சம், பிளாட் கேட்டு கொடுமைப் படுத்துவதாக ஆலீஸ், போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும், பாடி பில்டிங் செய்யும் தன் கணவன் விஷால், அடிக்கடி ஸ்டீராய்டு ஊசிப் போட்டுக் கொண்டதால் ஆண்மையை இழந்துள்ளதாகவும், இதனால் குழந்தை பெற மச்சினனுடன் உடலுறவு கொள்ள மாமியார் வீட்டார் வற்புறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 6, 2025

தேர்தல் கூட்டணி.. அறிவித்தார் செங்கோட்டையன்

image

பாஜக தன்னை தவெகவுக்கு அனுப்பியதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஒரு கட்சியின் தலைவருடைய கொள்கைதான் அனைத்துத் தொண்டனுக்கும். அது தனக்கும் பொருந்தும் எனக் கூறிய அவர், அதிமுக – தவெக கூட்டணிக்கு 100% வாய்ப்பே இல்லை என உறுதிபட அறிவித்தார். மேலும், மாபெரும் மக்கள் சக்தியுடன் தவெக தலைவர் விஜய் ஆட்சிக் கட்டிலில் அமர்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 6, 2025

புதிய கொடியை அறிமுகம் செய்தார் வைகோ

image

போதைப் பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல்கள் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி வைகோ ‘சமத்துவ நடைபயணம்’ மேற்கொள்கிறார். இந்நிலையில், ஜன.2-ல் திருச்சியில் தொடங்கும் இப்பயணத்துக்கான கொடியை CM ஸ்டாலின், வைகோவிடம் கொடுத்து பயணத்தை தொடங்கி வைக்கிறார். இப்பயணம் ஜன.12-ல் மதுரையில் நிறைவடைகிறது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னுடன் பங்கேற்பார்கள் என்றும் வைகோ கூறியுள்ளார்.

News December 6, 2025

கோவில்பட்டியில் அரசன் பட பூஜை?

image

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், டிச.8-ல் கோவில்பட்டியில் பட பூஜை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பிரமாண்டமான முறையில் வடசென்னை செட் போடப்பட்டுள்ளதாம். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு காம்போ வெற்றி பெறுமா?

error: Content is protected !!