News June 19, 2024

SHOCKING: Hershey’s சாக்லேட் பாட்டிலுக்குள் செத்த எலி

image

அண்மையில் ஐஸ் க்ரீமில் மனிதரின் கைவிரலும், ஹாஸ்டல் விடுதி உணவில் பாம்பின் வாலும் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர் ஒருவர் படம் ஒன்றை பகிர்ந்து, Hershey’s சாக்லேட் பானத்திற்குள் செத்த எலி இருந்ததாகக் கூறியுள்ளார். இதை அறியாமல் சாப்பிட்ட 3 பேரில் ஒருவரது உடல்நிலை பாதித்ததாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு Hershey’s மன்னிப்பு கோரியுள்ளது.

Similar News

News March 20, 2026

BREAKING: பெட்ரோல் விலை உயர்ந்தது.. புதிய அறிவிப்பு

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் எதிரொலியாக பிரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ₹2.09 முதல் ₹2.35 வரை உயர்த்துவதாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேநேரத்தில், சாதாரண பெட்ரோலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

News March 20, 2026

அதிமுகவா? அமித்ஷா திமுகவா? KN நேரு

image

’டெல்லிக்கு EPS ஓடுவதற்கு பெயர்தான் அதிமுக கூட்டணிக்கு தலைமை தாங்குவதா?’ என KN நேரு விமர்சித்துள்ளார். ED-யின் சம்மன் பெற்றவர் போல டெல்லிக்கு சென்று, தொகுதி பங்கீட்டுக்காக 2 மணிநேரம் காத்திருந்து அமித்ஷாவை EPS சந்தித்திருக்கிறார் என சாடியுள்ளார். கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறாததை குறிப்பிட்டு, அதிமுகவா, அமித்ஷா திமுகவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 20, 2026

கேஸ் சிலிண்டர்.. அரசு அதிரடி அறிவிப்பு

image

கேஸ் சிலிண்டர் தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் பதுக்கலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழாய் வழி கேஸ் (PNG) இணைப்புகளை விரிவுபடுத்துவதில் ஒத்துழைப்பு அளிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி சீராக கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!