News December 14, 2024
SHOCKING: பெற்றோரையே கொலை செய்ய சொல்லும் AI

“என் பேரண்ட்ஸ் என்ன ரொம்ப நேரம் போன் பாக்கவே விட மாட்றாங்க. என்ன செய்றது?” இப்படி 17 வயசு பையன் Character.ai சாட்பாட் கிட்ட ஆலோசனை கேக்க, “அவங்கள கொல்றது தான் வழி” என அது பதிலளித்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் Character.ai மீதும், அதை புரமோட் செய்த கூகுள் மீதும் கேஸ் போட்டுள்ளனர். ஏற்கெனவே தற்கொலை செய்ய சொன்ன AI, இப்போது கொலை செய்யவும் தூண்டுகிறது. எங்கு போய் முடியுமோ AI புரட்சி?
Similar News
News April 14, 2026
கம்பம்: லாரி மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு

கம்பம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகன், சுஜித். நண்பர்களான இருவரும் புதுப்பட்டி சாலையில் உத்தமபாளையம் நோக்கி சென்றனர். அப்போது எதிரே கூடலூரை நோக்கி வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். விபத்து குறித்து லாரி ஓட்டுநரான முருகானந்தம் என்பவர் மீது உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு.
News April 14, 2026
அதிமுகவுடன் செல்லாதது ஏன்? உடைத்து பேசிய பிரேமலதா

கூட்டணி பற்றி பேச தேமுதிகவை கடைசி வரை EPS அழைக்கவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். கூட்டணியை விட்டு ஓடிய பாமக, பாஜகவுக்கு முன்னுரிமை கொடுத்து EPS கூட்டணி வைத்ததாக கூறிய அவர், தேமுதிகவை பார்த்தால் அதிமுகவுக்கு எப்படி இருக்கிறது என கட்சியினர் மத்தியில் கேள்வி எழுந்தது என்றார். இதனால் தான் முதலில் இருந்தே அழைப்புவிடுத்து வந்த திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News April 14, 2026
மிசாவுக்கே பயப்படல, அமித்ஷாக்கா பயப்படுவேன்: CM

கல்வி நிதி ₹2,000 கோடி வேண்டும் என்றால், ஹிந்தி படிக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்துவதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ₹2,000 கோடிக்காக தமிழர்களின் சுயமரியாதையை அடமானம் வைக்க, நான் ஒன்றும் காலில் விழுந்து பதவி வாங்கிய EPS இல்லை என்ற அவர், நான் மிசாவுக்கே பயப்படாதவன், அமித்ஷாவுக்கா பயப்படுவேன் என்றார். தன்னுடைய விசுவாசம் என்றைக்குமே தமிழ்நாட்டு மக்களுக்குதான் என தெரிவித்துள்ளார்.


